Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த தேதியிலேயே மறைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி

Advertiesment
பிறந்த தேதியிலேயே மறைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி
, வியாழன், 18 அக்டோபர் 2018 (16:25 IST)
நாராயண் தத் திவாரி (93) உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
உத்தராகண்ட் மற்று உ.பி மாகிய இருமாநில முதல்வராக இருந்தவர். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தவர்.
 
பிரஜாசோசலிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர் பின் தன் கட்சியை காங்கிரஸில் இணைந்தார்.
1925 ஆம் வருடம் அக்டோபர் 18ஆம்தேதி பிறந்தவர் தான் பிறந்த தேதியான இன்று 2018 அக்டோபர் 18 ஆம் நாளில் இயற்கை எய்தினார்.
 
இவர் உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 2002 - 2007 ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர் ஆவார்.
 
1976- 77, 1984-85, 1988-89ல் உத்தரபிரதேச முதல்வராக 3முறை பதவி வகித்துள்ளார்.
உத்ராகண்ட் ,உத்தரபிரதேசம் என இரண்டு மாநில முதலமைச்சராக இருந்த ஒரே நபர் என்ற தனிச் சிறப்புடையவர் என்,டி திவாரி ஆவரர்.
 
காங்கிரஸில் பல்வேறு முக்கிய பதவி வகித்தவர் இன்று உடல் நலக் குறைவின் காரணமாக இறந்ததால் அவரது மறைவிற்கு காங்கிரஸ்தலைவர்களும் மற்ற அரசியை தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 கோடி சிம் பிளாக்? பயனர்களின் நிலை என்ன?