Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்பி எடுத்தால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

Advertiesment
செல்பி எடுத்தால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் : மருத்துவர்கள் எச்சரிக்கை
, திங்கள், 20 ஜூன் 2016 (14:09 IST)
செல்போனில் செல்பி எடுத்தால் தோலில் பாதிப்பு ஏற்படும் என்று தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


 

 
ஸ்மார்ட்போன் வந்த பிறகு செல்போனில் செல்பி எடுக்கும் பழக்கம் அனைத்து நாடுகளில் வசிக்கும் மக்களிடமும் வேகமாக பரவி வருகிறது. மேலை நாடுகளில், ஆபத்தான இடங்களுக்கு சென்று அங்கு செல்பி எடுத்து அதை தனது சமூகவலைத் தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அப்படி செல்பி எடுக்க முயன்ற பலர் பரிதாபமாக பலியான கதையும் உண்டு.
 
இப்படி இருக்கும் போது, நம் செல்போனில் எடுக்குப்படும் செல்பியால் தோல் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது அடிக்கடி செல்பி எடுத்தால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
செல்பி எடுக்கும் போது, செல்போனில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி முகத்தில் உள்ள தோலை பாதிக்கும். மேலும், செல்போனில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்கள், டி.என்.ஏவை பாதிக்கச் செய்து தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தும்.
 
எனவே அடிக்கடி செல்பி எடுத்தால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, விரையில் வயதானவர் போல தோற்றம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
 
இந்த செய்தி அடிக்கடி செல்பி எடுக்கும் பழக்கமுள்ளவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பாண்டியராஜன் மகன் கைது