Publish Date: Tue, 18 Feb 2020 (20:08 IST)
Updated Date: Tue, 18 Feb 2020 (20:10 IST)
சீனிவாச கவுடாவின் சாதனையை நான்கே நாட்களில் உடைத்த வீரர்
கம்பளா எருமை மாட்டு பந்தயத்தில் சீனிவாச கவுடா சமீபத்தில் உசேன் போல்ட் சாதனையை முறியடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நான்கே நாட்களில் சீனிவாச கவுடா சாதனையை மற்றொரு வீரர் முறியடித்து சாதனை செய்துள்ளார்.
கர்நாடாவில் பிரபலமான கம்பளா எனும் எருமை மாடு பந்தயத்தில் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடி அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் சீனிவாச கவுடா. இவருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பயிற்சி அளிக்கவும் தயார் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த வாய்ப்பை சீனிவாச கவுடா உதறினார்.
இந்த நிலையில் இவரது சாதனையை முறியடிக்கும் நிலையில் நிஷாந்த் ஷெட்டி என்ற மற்றொரு கம்பளா வீரர் தற்போது 143 மீ தொலைவை 13.68 நொடிகளில் கடந்துள்ளார். இதன்படி பார்த்தால் இவர் 100மீ தொலைவை 9.51 வினாடிகளில் கடந்துள்ளார் என்பதால் இவர் உசேன் போல்ட் மற்றும் சீனிவாச கவுடா ஆகிய இருவரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இந்த நிலையில் சீனிவாச கவுடாவுக்கு கொடுக்க முன்வந்த ஒலிம்பிக் பயிற்சியை நிஷாந்த் ஷெட்டிக்கும் மத்திய அரசு வழங்கி இவரை அங்கீகரிக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு என்ன முடிவெடுக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்