Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிடம் ரஷ்யா கடன் கேட்டதா ? – சீமான் கேள்வி !

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (14:04 IST)
பிரதமர் மோடி ரஷ்யாவின் தூரதேச நகரங்களை முன்னேற்றும் விதமாக ரூ 7200 கோடி கடனளிக்கப்படும் என அறிவித்துள்ளது  குறித்து சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி செப்டம்பர் 3 ஆம் தேதி கிழக்கு மண்டல பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்யா சென்றார். அப்போது ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக 7,200 கோடி கடன் அளிக்கப்படும் என உறுதியளித்தார். இது இந்தியா இப்போதிருக்கும் நிலைமையில் தேவையான ஒன்றா என்று சர்ச்சைகள் எழுந்தன.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் அளித்த பதிலில் ’ டீமானிடசைஷேன் மற்றும் ஜி எஸ்டி போன்ற தவறான நடவடிக்கைகளால் மக்கள் வாங்கும் திறனை இழந்துள்ளனர். மத்திய அரசே ரிசர்வ் வங்கியில் இருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை எடுத்துள்ளது. இப்போது ரஷ்யா உங்களிடம் கடன் கேட்டதா?. ரஷ்யாவுக்குக் கடன் கொடுக்கும் அளவுக்கு இந்தியா இப்போது உள்ளதா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments