கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் சற்றுமுன் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சில நிமிடங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், பெங்களூர் நகரம் முழுக்க இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்து ஒருவேளை அரசு கலைந்தால் அரசியல் கட்சியினர் நடுவே மோதல் போக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது
கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க இன்று மாலை 6 மணிக்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இன்று மதியம் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்னும் ஒருசில நிமிடங்களில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான ஓட்டெடுப்பு நடைபெறும் என தெரிகிறது