அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (09:10 IST)

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஒடிசாவில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

 

கோடைக்கால சீசன் தொடங்கிவிட்ட நிலையில் நாளாக நாளாக வெப்பநிலை மெல்ல அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக தொடங்கியுள்ள நிலையில் மக்கள் மதிய நேரங்களில் வெளியே வருவதே சிரமமாக உள்ளது. 

 

இதை கவனத்தில் கொண்டு ஒடிசாவில் அரசு வேலை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் அங்குள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளுக்கு நாள் வெயில் மேலும் அதிகரித்து வருவதால் பிற மாவட்டங்களில் இந்த முறை அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments