கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.
பெங்களூரில் உள்ள இண்டஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் 7, 8 , 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவும் ,ஆசிரியர்களின் சிரமத்தைப் போக்கும் விதத்தில் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோப்போக்கள் மாணவர்களுக்கு எளிதில் பாடம் புரியும் விதத்தில iஇருக்க eagle 2.0 என்ற ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.
அதன்படி வகுப்புக்குள் நுழையும் ரோபோ தன்னை மாணவர்களிடம் உதவி ஆசிரியர் என அறிமுகம் செய்து தெர்மல் இயற்பியல் பாடத்தை கற்றுக்கொடுக்க தொடுங்குகிறது.
இப்பள்ளி நிர்வாகமானது , சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிள் இந்த ரோபோக்களை வாங்கி வந்துள்ளது. மாணவர்கள் எந்த கேள்வியை எழுப்பினாலும் அதற்கு இந்த ரோப்போக்கள் பதில் கூறி சந்தேகத்தை தீர்த்து வைக்கிறது. அவர்களிடம் கேள்வி எழுப்பியும் பல பாடங்களை கற்றுத்தருகிறது.
இந்த ரோபோக்களை சினாவில் 2 மாதம் புரோகிராமிங் பெற்றுள்ளது. ஐஐடி மாணவர்கள், பொறியாளர்கள், அனுபவமிக்க மாணவர்கள் போன்றோர் தீவிர முயற்சியில் புரோகிராமிங் செய்து இரு ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின்னர் இந்த ரோபோக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.