ராஜஸ்தான் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த சாலையை கடக்க முயன்ற பள்ளி வாகனம் ஒன்று 50 குழந்தைகளுடன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் மழை வெள்ளத்தால் சாலையின் ஒரு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் பள்ளிக்குழந்தைகள் 50 பேருடன் பள்ளி பேருந்து ஒன்று அதனை பேருந்து கடக்க முயன்றபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
வாகனத்தில் இருந்த மாணவர்கள் அலறியதால், அவர்களின் குரல் கேட்டு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் திரண்டு, வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பேருந்தின் மேல் தளம் வரை தண்ணீரில் மூழ்கியது.
இளைஞர்களின் தீவிரமான மீட்பு பணியால் அனைத்து குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.