புதுச்சேரி மாநிலத்தில் 100 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களுக்கு ரூ.7 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
நமது அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது அம்மா நிலத்தில் சட்டசபை நடந்து வரும் நிலையில், அங்கு முதியவர்களுக்கான உதவித் தொகை கேட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்ப கள் குவிந்துள்ளன.
எனவே, இன்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, 100 வயதிற்கு மேல் உள்ள முதியவரக்ளுக்கு ரூ.7 ஆயிரம் உதவித் தொகையும்,,90 வயது முதல் 100 வயது வரை உள்ள முதியவர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாஅர்.
மேலும் கடலில் மீன்பிடிக்கும்போது, விபத்தின் சிக்கி உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து, ரூ.10 லட்சமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.