Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

Advertiesment
Scam 2010

Prasanth Karthick

, திங்கள், 20 மே 2024 (09:13 IST)
இந்தியாவில் நடந்த புகழ்பெற்ற ஊழல் சம்பவங்களை, ஊழல்வாதிகளை மையப்படுத்தி வெளியாகி வரும் Scam வெப் சிரிஸ் அடுத்த சீசனில் சஹாரா கார்ப்பரேட் நிறுவனம் தொடர்பான ஊழலை படமாக்குவதாக அறிவித்த நிலையில் அதற்கு சஹாரா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் பலவிதமான ஊழல் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி உள்ளது. அந்த ஊழல் சம்பவங்களையும், அதன் காரணக்கர்த்தாக்களையும் மையப்படுத்தி விருவிருப்பான இணைய தொடராக Scam வெப் சிரிஸ் வெளியாகி வருகிறது.

Scam 1992 வெப் சிரிஸானது பங்குசந்தை மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷத் மேத்தா மற்றும் அவரது ஊழல்களை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து வெளியான Scam 2003 வெப் சிரிஸ் அப்துல் கரிம் தெல்கி என்பவர் போலி ஸ்டாம்ப் மோசடி செய்து அரசாங்கத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதை குறித்து விளக்கியது.

அந்த வகையில் தற்போது Scam 2010 வெப் சிரிஸ் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இந்த தொடர் 2010ல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல சஹாரா நிறுவனம் குறித்தும், அதன் நிறுவனர் சுப்ரதா ராய் குறித்தும் கதையை சொல்ல உள்ளது. இதற்கான அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.


இந்நிலையில் இந்த Scam வெப் தொடரை இயக்கும் ஹன்சல் மேத்தா மீது வழக்கு தொடர உள்ளதாக சஹாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹன்சல் மேத்தாவிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சஹாரா க்ரூப்ஸ், ஸ்கேம் படக்குழுவினர் தங்கள் நிறுவனத்தை பற்றிய கற்பனையான குற்றச்சாட்டுகளை சித்தரிக்க முயல்வதாகவும், இந்த தொடரை வெளியிட தடை கோர உள்ளதாகவும், ஹன்சல் மேத்தா மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமல் பந்தோபத்யாய் எழுதிய Sahara: The untold story என்ற புத்தகத்தை மையப்படுத்தி இந்த வெப் சிரிஸ் தயாராகியுள்ளது. 2000களில் சிட்பண்ட் மூலமாக போலி முதலீடுகளை காட்டி ஊழல் செய்த வழக்கில் சஹாரா நிறுவனர் சுப்ரதா ராய் 2014ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!