Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”என்னை மிரட்டாதீர்கள்; நான் பயப்பட மாட்டேன்” - நீதிமன்றத்தை விமர்சித்த கட்ஜு வெளியேற்றம்

”என்னை மிரட்டாதீர்கள்; நான் பயப்பட மாட்டேன்” - நீதிமன்றத்தை விமர்சித்த கட்ஜு வெளியேற்றம்
, சனி, 12 நவம்பர் 2016 (11:26 IST)
என்னை மிரட்டிப் பார்க்காதீர்கள்; அப்படி செய்தாலும் நான் பயப்பட மாட்டேன் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியதால் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


 

கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சவுமியா (23) என்ற இளம்பெண்  ஓடும் ரயிலில் இருந்து குதித்தபோதும், குற்றவாளி கோவிந்தசாமியும் கீழே குதித்து, தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த சவுமியாவை ஈவு இரக்கமின்றி கற்பழித்துள்ளார். அதில், சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளி கோவிந்தசாமிக்கு திருச்சூர் விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனையடுத்து, கோவிந்தசாமி  தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அடுத்து, கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு தள்ளுபடி ஆனதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித் உச்சநீதிமன்றம், போதுமான சாட்சிகள், ஆதாரங்கள் இல்லை என்பதால் கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து விமர்சித்திருந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, “நீதிமன்றத்தின் தீர்ப்பு வருந்தத்தக்கது; இந்தத் தீர்ப்பானது திறந்த நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே, சவுமியாவின் தாயார் சுமதி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு, வெள்ளிக்கிழமையன்று விசா ணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவும் ஆஜரானார்.

அப்போது, மார்க்கண்டேய கட்ஜூ, தீர்ப்பை விமர்சனம் செய்ததோடு, தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் விமர்சனம் செய்ததாக குற்றம்சாட்டிய நீதிபதிகள், மார்க் கண்டேய கட்ஜூ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வ தாகவும், அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த கட்ஜூ, நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாயைப் பார்த்து “மிஸ்டர் கோகாய் , நீங்கள் என்னை மிரட்டிப் பார்க்காதீர்கள்; அப்படி செய்தாலும் நான் பயப்பட மாட்டேன்; இந்தியா சுதந்திரமான நாடு, உங்களால் எனது சுதந்திரத்தை தடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

கோகாயை கேலி செய்வது போல, நீங்கள் எனக்கு ஜூனியர்தானே என்றும் கட்ஜூ குறிப்பிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், பாதுகாவலர்களை அழைத்து கட்ஜூவை நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றுமாறு உத்தர விட்டனர்.

உச்சநீதிமன்ற வரலாற்றில், முதல் முறையாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை பெறும் ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விழா மேடையில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!