Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழா மேடையில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!

விழா மேடையில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!

விழா மேடையில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
, சனி, 12 நவம்பர் 2016 (11:22 IST)
கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் தன்வீர் விழா மேடையில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


 
 
கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தன்னுடைய மொபைல் போனில் ஆபாச படங்களை பார்க்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி: NewsX
 
ஆனால் அமைச்சர் தன்வீர் வாட்ஸ்ஆப் குரூப்பில் வந்த ஆபாச படத்தை பார்த்த சில விநாடிகளிலேயே அதிலிருந்து வெளியே வந்ததாகவும், அவர் குறிப்பிட்ட இணையதளத்துக்கு சென்று ஆபாச காட்சிகளை பார்க்கவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த சம்பவத்துக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: மருத்துவர்கள் தொடர் சிகிச்சை