ஜாமீன் கிடைத்தும், ப.சிதம்பரத்திற்கு சிறையே கதி!!

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (10:54 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். 
 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவரானதன் அடிப்படையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து சிபிசி விசாரித்து வந்தது. 
 
இதன் பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பல முறை ப.சிதம்பரம் ஜாமீனுக்கு கோரியபோதும், அதை நிராகரித்த நீதிமன்றம் தற்போது ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 
 
ஆம், ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தவும், வெளிநாடு செல்லக்கூடாது என்றும்  நிபந்தனை விதித்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சிபிஐயால் கைது செய்யப்பட்டு கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments