ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவரானதன் அடிப்படையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து சிபிசி விசாரித்து வந்தது.
இதன் பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பல முறை ப.சிதம்பரம் ஜாமீனுக்கு கோரியபோதும், அதை நிராகரித்த நீதிமன்றம் தற்போது ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆம், ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தவும், வெளிநாடு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சிபிஐயால் கைது செய்யப்பட்டு கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்பது கூடுதல் தகவல்.