காங்கிரஸ் ரூட்டில் காஸ்கிரஸுக்கு ரிவீட் அடித்த அமித்ஷா!!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (16:21 IST)
ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரசாரம் செய்த எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி என அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
இன்று சபரிமலை வழக்கு, ரஃபேல் வழக்கு, ராகுல் காந்தி வழக்கு என்று முக்கியமான வழக்குகளுக்கு ஒரேநாளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. ரஃபேல் போர் விமான வழக்குக்கு அளிக்கப்பட தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். 
 
ஆம், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாவது, மோடி அரசு ஊழல் இல்லா வெளிப்படையான அரசு என்பதை ரஃபேல் தீர்ப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது. ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரசாரம் செய்த எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி என தெரிவித்துள்ளார். 
 
அயோத்தி தீர்ப்பு வெளியான போது காங்கிரஸ் தரப்பில், அயோத்தி தீர்ப்பின் மூலம் பாஜக போன்ற கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கும் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என தெரிவித்தது போல காங்கிரஸ் பொய் பிரச்சாரத்திற்கு ரஃபேல் தீர்ப்பு பதிலடி என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments