Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வங்கி சேவைகள் தற்காலிக நிறுத்தம்! – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (15:57 IST)
இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியான எஸ்.பி.ஐ பராமரிப்பு காரணங்களுக்காக வங்கி ஆன்லைன் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஏராளமான வங்கி கிளைகள் மற்றும் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது எஸ்பிஐ வங்கி. இதன் சேவைகள் ஆன்லைனிலும் எளிதாக கிடைக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை, கடன் விண்ணப்பித்த மேலும் பல சேவைகளும் எளிதாக கிடைக்கும்படி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்கமான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 11 இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை வங்கியின் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த நேரத்திற்குள் ஆன்லைன் சேவைகள் சரியாக செயல்படாது என்றும், காலை வழக்கம்போல சேவைகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments