Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி கருத்து தெரிவித்த கங்குலி மகள் – தாதாவின் ரியாக்‌ஷன் !

Advertiesment
குடியுரிமை திருத்த சட்டம் பற்றி கருத்து தெரிவித்த கங்குலி மகள் – தாதாவின் ரியாக்‌ஷன் !
, வியாழன், 19 டிசம்பர் 2019 (13:28 IST)
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் சனா கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கம் முழுவதும் போராட்டம் வெடிக்க அதற்கு ஆதரவாகம் சட்ட மசோதாவுக்கு எதிராகவும் அவர் தனது டிவிட்டரில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் தெ எண்ட் ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்தார்.

அதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சனாவின் தந்தை கங்குலி தனது டிவிட்டரில் ‘இந்த பிரச்சனைகளில் இருந்து சனாவை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உண்மை இல்லை. அவள் இளம் பெண். அரசியலை பற்றி சனாவுக்கு எதுவும் தெரியாது.’ எனக் வேண்டுகோள் விடுக்கும் விதமாக பேசியுள்ளார். அதன் பின் அந்த பதிவும் நீக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடங்கியது ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ!!