”நான் ஏன் மோடியை புகழ்கிறேன்?”: காங்கிரஸ் தலைவர் விளக்கம்

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (09:50 IST)
காங்கிரஸின் மூத்த தலைவர் சசி தரூர், பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து வருவதன் காரணத்தை அவரே விளக்கியுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். இது காங்கிரஸின் பிற தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் விளக்கம் கேட்டிருந்தார்.

அதற்கு பதில் கடிதம் ஒன்றை சசி தரூர் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”2014 தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் ஓட்டு சதவீதம் 31 ஆக இருந்தது. ஆனால் அதனை பிரதமர் மோடி, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 37 சதவீதமாக உயர்த்தினார். இது மக்கள் அவர் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை காட்டுகின்றது.” என கூறியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில், ”பாஜக மீதான மக்களின் நம்பிக்கையை நாம் மீண்டும் வென்றாக வேண்டும் என்றால், மோடியிடம் உள்ள ஈர்ப்பை, நாமும் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நமது விமர்சனத்துக்கு இன்னும் நம்பகத்தன்மை ஏற்படும்” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments