Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாஜ்வாதி - காங்கிரஸ் தொகுதி பங்கீடு நிறைவு..! காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு.!!

Senthil Velan
புதன், 21 பிப்ரவரி 2024 (15:49 IST)
மக்களவைத் தேர்தலில் உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ள இந்தியா கூட்டணி, வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த தீவிரம் காட்டி வருகின்றது. 
 
இந்நிலையில் 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில்,  62 தொகுதிகளில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள.

ALSO READ: தென்கொரியாவில் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா..! சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பாதிப்பு.!!
 
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சி இடையே ஏற்பட்டுள்ள தொகுதி உடன்பாடு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments