Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சல்மான்கான் சர்ச்சை கருத்து : கற்பழிக்கப்பட்ட பெண் ரூ.10 கோடி கேட்டு வழக்கு

Advertiesment
சல்மான்கான் சர்ச்சை கருத்து : கற்பழிக்கப்பட்ட பெண் ரூ.10 கோடி கேட்டு வழக்கு
, திங்கள், 27 ஜூன் 2016 (19:28 IST)
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல் உணர்ந்தேன் என்று நடிகர் சல்மான்கான் கூறிய கருத்து தன்னை மனதளவில் பாதித்ததாக கூறி, 10 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் ரூ.10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
அரியானா மாநிலம் ஹிசார் புகுதியை சேர்ந்த பெண், நான்கு வருடங்களுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறி, பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்நிலையில், சமீபத்தில் சல்மான்கான் கூறிய கருத்து தன்னை மனதளவில் பாதித்ததாக கூறி அந்த பெண் சல்மான்கான் தனக்கு ரூ.10 கோடி தரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
மஸ்தான் என்ற படத்தில் நடித்திருக்கும் சல்மான்கான் ஒரு பேட்டியில் “ அந்த படத்திற்கான படப்பிடிப்பில் ஏற்பட்ட உடல் அசதியின் போது, நான் ஒரு கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் போல் உணர்ந்தேன்” என்று கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் சல்மான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில், கற்பழிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ள விவகாரம், மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன்னி லியோன் நாளை சென்னை வருகை