Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சல்மான்கான் மானை சுட்டது உண்மை: காணாமல் போன டிரைவர் பரபரப்பு பேட்டி

சல்மான்கான் மானை சுட்டது உண்மை: காணாமல் போன டிரைவர் பரபரப்பு பேட்டி
, வியாழன், 28 ஜூலை 2016 (09:14 IST)
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில், 1998-ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’என்ற படத்தில் நடிக்க வந்த பிரபல நடிகர் சல்மான் கான், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த்தாகவும், அதை பயன்படுத்தி 3 அரிய வகை மான்களை வேட்டையாடியதாகவும், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.


 

 
இது தொடர்பாக அவர் மீது இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த, வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில், சல்மான் கானிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கீழ் நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சல்மான்கான் மேல்முறையீடு செய்தார். 
 
இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து நேற்று சல்மான் கானை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. 
 
இந்த வழக்கில் அரசுத்தரப்பின் ஒரே சாட்சியாக இருந்தவர், சம்பவம் நடந்த போது, சல்மான்கானின் ஜீப் டிரைவராக இருந்த ஹரிஷ்துலானி ஆவர். இவர் 2002ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தார். இதனால் வழக்கு பலவீனம் அடைந்து, சல்மான்கான் விடுதலை ஆவதற்கு வழி வகுத்தது.
 
இந்நிலையில், திடீரென நேற்று ஹரிஷ் துலானி, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
 
சல்மான்கான், அந்த மானை சுட்டுக்கொன்றார் என்று 18 ஆண்டுகளுக்கு முன்பே மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தேன். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நான் தலைமறைவாகி விடவில்லை. எனக்கும், என் தந்தைக்கும் ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தேன்.
 
ஜோத்பூரில் உள்ள என் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்தேன். எனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். ஆனால் போலீசார் கொடுக்கவில்லை.. ஒருவேளை கிடைத்திருந்தால், நீதிமன்றம் வந்து சாட்சி சொல்லியிருப்பேன்.
 
சல்மான்கானுக்கு டிரைவராக பணி புரிந்ததால், அச்சத்துடன் வாழ்ந்து வருவதே எனக்கு தண்டனையாகி விட்டது. இப்போது அச்சத்துடன் வாழ்ந்து வருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
 
மான் வழக்கில் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன அவரின் டிரைவர், இப்படி பேட்டி அளித்திருப்பது சல்மான்கானுக்கு மீண்டும் தலைவலியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியரின் நாற்காலியில் அமர்ந்ததால் 8 வயது மாணவனை பிரம்பால் தாக்கிய பள்ளி நிறுவனர்