ஐபிஎல் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது சியர்ஸ் கேர்ள்ஸ்தான். பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்கும்போது, விக்கெட் விழும்போதும் இந்த சியர்ஸ் கேர்ள்ஸ் போட்டும் ஆட்டத்துக்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் இந்த சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
ஒரு போட்டிக்கு ஆட்டம் போட ஒவ்வொருவருக்கும் ரூ.30,000 சம்பளமாம். இதில் தங்களுடைய அணி வெற்றி பெற்றால் கூடுதல் போனஸ் வேறு கிடைக்கும். இந்த சம்பளம் போட்டி நடைபெறும் நான்கு மணி நேரத்துக்கு மட்டுமே. அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற அணி நடத்தும் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு கூடுதலாக ரூ.10,0000 போனஸ் வழங்கப்படுமாம்
அதுமட்டுமின்றி போட்டோஷூட்டில் கலந்து கொண்டால் அதற்கு தனி சம்பளமாம். ஆகவே குறைந்தது இந்த சியர்ஸ் கேர்ள்ஸ் நாள் ஒன்றுக்கு ரூ.50000 வரை சம்பாதிக்கின்றனர். இதுவரை வெளிநாட்டு பெண்கள் மட்டுமே சியர்ஸ் கேர்ள்ஸ் ஆக பணிபுரிந்த நிலையில் தற்போது இந்திய பெண்களும் இந்த வேலையை செய்கின்றனர்