Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடக மக்கள் அப்படித்தான் செய்வார்கள்: நியாயப்படுத்தும் மத்திய பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து!

கர்நாடக மக்கள் அப்படித்தான் செய்வார்கள்: நியாயப்படுத்தும் மத்திய பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து!

கர்நாடக மக்கள் அப்படித்தான் செய்வார்கள்: நியாயப்படுத்தும் மத்திய பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து!
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (11:02 IST)
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதையடுத்து கர்நாடகா கலவர பூமியாக மாறியுள்ளது. தமிழர்கள் மீது தாக்குதல், தமிழர்கள் உடமையல் மீது தாக்குதல் என வன்முறையின் உச்சத்தில் இருக்கிறார்கள் கன்னடர்கள்.


 
 
இந்நிலையில் அவர்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தை நியாயப்படுத்தும் விதமாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறை அமைச்சருமான சதானந்த கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியது:- சுப்ரீம் கோர்ட்டில் இருந்து இதுபோன்ற தீர்ப்பு வரும் என கர்நாடக மக்கள் எதிர்பார்க்கவில்லை, இதுபோன்ற நிலையில் மக்கள் உணர்ச்சிவசப்படுவது இயல்பானது தான் என்று கூறியுள்ளார்.
 
ஆனாலும், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மக்கள் உணர்ச்சிவசப்படுவது இயல்பானது தான் என அவர் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின்  இந்த கருத்து சரியானது இல்லை என கூறப்படுகிறது.
 
இது போன்ற கலவரங்கள் தமிழகத்தில் நடந்தால், கர்நாடகாவை சேர்ந்த இந்த மத்திய அமைச்சர் இப்படி கருத்து சொல்வாரா?.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செவ்வாய் கிரகத்தில் மலைக் குன்று, பாறைகள் இருந்ததற்கான புகைப்படங்கள் வெளியீடு