மூட்டை மூட்டையாக எரிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
மூட்டை மூட்டையாக எரிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கடந்த 8-ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கையில் உள்ள பழைய நோட்டை வங்கியில் டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டை பெறலாம் என கூறப்பட்டது.
கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்கவே இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருமித்தே வருகின்றன. ஆனால் கருப்பு பணம் கோடி கோடியாக வைத்திருப்போர் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் மூட்டை மூட்டையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி, சி.பி.கஞ்ச் பகுதியில் நடந்துள்ளது. பர்ஷா கேடா சாலையிலுள்ள ஒரு நிறுவனத்தின் அருகில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மூட்டை மூட்டையாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி அதனை தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த தகவலை பெற்ற காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எரிந்த நோட்டுக்களை கைப்பற்றிய காவல்துறையினர் ரிசர்வ் வக்கிக்கு தகவல் கொடுத்து கைப்பற்றப்பட்ட நோட்டுகளின் நம்பகத்தன்மையை பரிசோதித்து வருகின்றனர். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.