Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினுக்கு ஷேவிங் செய்த இளம்பெண்: வைரலாகும் புகைப்படம்

Webdunia
சனி, 4 மே 2019 (22:37 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு ஒரு இளம்பெண் ஷேவிங் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சச்சினே தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உபி மாநிலத்தில் தந்தை நடத்தி வந்த ஒரு சலூன் கடையை அவருடைய மறைவிற்கு பின் அவருடைய இரண்டு மகள்கள் நடத்தி வருவது குறித்து செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலானது, இதுகுறித்து அறிந்த சச்சின் தெண்டுல்கர், அந்த சலூனுக்கு நேரடியாக சென்று அந்த இரண்டு பெண்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவரே அந்த சலூன் கடையில் ஷேவிங்கும் செய்து கொண்டார்.
 
பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யும் சலூன் தொழிலில் இரண்டு இளம்பெண்கள் சாதித்து வருவதை ஊக்கப்படுத்தவே சச்சின் அந்த சலூனுக்கு சென்றதாக கூறப்படுகிறது. சச்சினின் வருகைக்கு பின் அந்த கடை மாநிலம் முழுவதும் ஃபேமஸ் ஆகிவிட்டது. தற்போது விஐபிக்களும் அந்த கடைக்கு வாடிக்கையாளர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments