இப்படி கட்டிபிடிச்சு போஸ் கொடுக்க எதுக்கு சண்ட போட்டீங்க: ராஜஸ்தான் அரசியல்!!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (17:48 IST)
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உடன் அவரது இல்லத்தில் சச்சின் பைலட் சந்திப்பு. 
 
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால்,  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   
  
இதனைத்தொடர்ந்து நேற்று ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் சச்சின் பைலட்டை காங்கிரசிலிருந்து நீக்க எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்தனர்.     
 
அதன்படி சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட்டுக்கு பதில் கோவிந்த் சிங் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
சச்சின் பைலட் நீக்கப்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அவரது பெயர்ப்பலகை அகற்றப்பட்டது.  தனது ட்விட்டர் பக்கத்தில் துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்ததை சச்சின் பைலட்டும் நீக்கினார்.
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை  அவரது இல்லத்தில் சச்சின் பைலட் சந்தித்தார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments