நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வால் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலை கோவிலும் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. தற்போது மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதுடன் இதுகுறித்த முடிவுகளை மாநில அரசே மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலை திறப்பதற்கான நடவடிக்கைகளை திருமலை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு இன்னமும் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், மாதாந்திர பூஜைகளுக்காக மட்டுமே திறக்கப்படுவதாகவும் தேவசம்போர்டு விளக்கமளித்துள்ளது.