புதுவையில் புளூவேல் விளையாட்டை விளையாடி வந்த வங்கி ஊழியர் பிரியா சமீபத்தில் மீட்கப்பட்டார்.
புதுவையில் பிரியா என்ற 23 வயது பெண் வங்கி ஊழியர் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையாக மனச்சோர்வுடன் இருப்பதாக அவரது தோழி புதுவை போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து அவரை போலீசார் தேடி சென்றனர். அப்போது அவர் கடற்கரை அருகே நின்று கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து அவரை மீட்டனர். அதையடுத்து அவருக்கு மனநல ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
விசாரணையில் தினமும் இரவு 1 மணிக்கு மேல், தனியறையில் அவர் அந்த விளையாட்டை விளையாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விளையாட்டை ஆட தொடங்கியதிலிருந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார்.
அவரது லேப்டாப்பை போலீசார் சோதனை செய்த போது, புளூவேல் விளையாட்டு பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதில், ஸ்கைப் மூலம் ரஷ்யாவிலிருந்து சிலர் அவரிடம் பேசி வந்துள்ளனர். அதேபோல், விபரீதமான கட்டளைகளைகள் மற்றும் மூளையை குழப்பும் வகையில் பல்வேறு தகவல்களையும் அவர்கள் பறிமாறி உள்ளனர்.
அந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, மத்திய உள்துறைக்கு புதுவை போலீசார் தகவல்களை அனுப்பியுள்ளனர்.