Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வாரம் இந்தியா வரும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்!!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (08:33 IST)
ஸ்பூட்னிக் வி மருந்து பரிசோதனைக்காக  அடுத்த வாரம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. 
 
உலகையே முடுக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு ரஷியா ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. 
 
இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த ஸ்பூட்னிக் வி-யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாக உருவாக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன் படி தற்போது இந்த மருந்து பரிசோதனைக்காக  அடுத்த வாரம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. 
 
இந்த மருந்திற்கான உற்பத்தி உரிமையை பெற்றுள்ள டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வக நிறுவனம் பரிசோதனைக்கான அனுமதியை பெற்றுவிட்டது. கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்படும் தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments