Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரலாற்றில் முதல் முறையாக... 10 நாட்களில் 5 முறை சரிந்த ரூபாயின் மதிப்பு!

வரலாற்றில் முதல் முறையாக... 10 நாட்களில் 5 முறை சரிந்த ரூபாயின் மதிப்பு!
, வெள்ளி, 20 மே 2022 (09:46 IST)
கடந்த 10 வர்த்தக நாட்களில் தொடர்ந்து ஐந்து முறை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. 

 
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: 
இந்நிலையில் இந்திய வரலாற்றில் இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. கடந்த 10 வர்த்தக நாட்களில் தொடர்ந்து 5 முறை ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது. 
 
இதன் தொடர்ச்சியா நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.61 காசுகளாக சரிந்தது. இன்று மேலும் 12 காசுகள் சரிந்துள்ளது தற்போது ரூ.77.73 ஆக சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சரிவின் காரணம் என்ன?
தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு வேகமாக சரிவை கண்டு வருகிறது. இதே போல பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த பணவீக்கம் விதிகம் 7.79% ஆக பதிவானது. இது கடந்த மார்ச் மாதத்தை விட 0.84% அதிகமாகும்.
webdunia

ஜோ பைடன் - மோடி  சந்திப்பு?
அடுத்த வாரம் டோக்கியோவில் குவாட் நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து ஜோ பைடன் - மோடி  சந்திப்பு நடைபெறும் என்றும் இந்த சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
 
அமெரிக்க அதிபர் மட்டுமின்றி ஜப்பான் பிரதமர் உட்பட மேலும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2,259 ஆக தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்