ஆர்.எஸ்.எஸ்.-ன் தற்போதைய தலைவரான மோகன் பகவத் அடுத்தா ஆண்டு தொடக்கத்தில் தமிழக்த்திற்கு வருகைப் புரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னதான் நாட்டை ஆட்சி செய்வது பா.ஜ.க. வாக இருந்தாலும் பாஜக வை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்.தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக எண்ணியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக மோடியை வேட்பாளராக அறிவிக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ் தான் என்றால் அதன் பலம் என்னவென்று யோசித்துப் பாருங்கள்.
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பலமுறை தீவிரவாத இயக்கம் எனத் தடை செய்யப்பட்டும் அதன் பிறகு தடை நீக்கப்பட்டும் வந்த வரலாறு ஆர்.எஸ்.எஸ் – க்கு உண்டு. ஆனால் தற்போதைய பாஜக வின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். –ன் பலம் அதிகமாகி வருவதாகவும் தனது இந்துத்வா தத்துவத்தை நாடு முழுவதும் பரப்ப முனைவதாகவும் சிறுபான்மையினருக்கும் அவர்தம் பண்பாட்டு, உணவு முறைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக ஆர்.எஸ்.எஸ். உருவாகியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அத்ற்கேற்றாற்போல ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் சர்ச்சையானக் கருத்துகளை அவ்வப்போது பேசி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியலில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி தமிழகம் வரும் அவர் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு தமிழகத்தின் முக்கியப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சென்னையில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ன் முக்கிய உறுப்பினர்கள் சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் தெரிந்துவிடும் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் யாரென்று….