Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.700 கோடி நிதியுதவி: மத்திய அரசின் திட்டவட்ட முடிவு அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (08:21 IST)
கேரள வெள்ள நிவாரண நிதியாக இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் நிதிகள் குவிந்து வரும் நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்த ரூ.700 கோடியை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்தே வெளிநாட்டு நிதிகளை பெறுவதில்லை என்று இந்தியா கொள்கை அளவில் முடிவு செய்துள்ளதால் ரூ.700 கோடியை ஏற்று கொள்ள முடியாது என மத்திய அரசு கூறியதாக செய்திகள் வெளிவந்தன.
 
இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவதாகவும், அதுவரை பொறுமையாக இருப்போம் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் மத்திய அரசு இந்த ரூ.700 கோடி ரூபாய் நிதியுதவியை பெறும் திட்டம் இல்லை என்றே மத்திய அரசு வட்டாரங்கள் கூறி வந்தன. இந்த நிலையில் சற்றுமுன் இந்திய வெளியுறவு அமைச்சகம், 'வெளிநாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என்ற கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட் அரசு அறிவித்த ரூ.700 கோடியை கேரள அரசு பெறுவதில் தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments