Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 17 ஜூன் 2024 (15:16 IST)
முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா கட்டி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து பொதுமக்கள் ஆத்திரத்துடன் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.
 
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைந்தார் என்பதும் அவரால் எதிர்க்கட்சியை அந்தஸ்தை கூட பிடிக்க முடியவில்லை என்பதும் தெரிந்தது.
 
இந்த நிலையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெகன்மோகன் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் 500 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி மதிப்பில் ஒரு அரண்மனை போன்ற பங்களா கட்டி உள்ளதாக தெரிகிறது. இந்த பங்களா அனைத்து விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த அரண்மனை கடந்த ஏழு மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த கட்டிடம் சுற்றுலாத் துறைக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டாலும் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த பயன்பாட்டுக்காக தான் கட்டப்பட்டது என்று கூறப்படும் நிலையில் இது குறித்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு இந்த கட்டிடத்தின் கிரகப்பிரவேசத்தை நடத்த ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது இந்த கட்டிடம் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments