Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணத்திற்கு சென்ற பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து பலி: ரூ.4 லட்சம் இழப்பீடு!

திருமணத்திற்கு சென்ற பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து பலி: ரூ.4 லட்சம் இழப்பீடு!
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:26 IST)
உத்தர பிரதேசத்தில் திருமணத்திற்கு சென்ற பெண்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தர பிரதேசம் குஷிநகர் மாவட்டத்தை சேர்ந்த நிபுவா நவ்ரங்கடா என்ற கிராமத்தில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. அந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் இரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் விருந்தினர்களில் சில பெண்கள் கிணற்றின் மேல் தளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்கள்.
 
கிணற்றின் மேல் தளம் இரும்பு வலையால் மூடப்பட்டிருந்த நிலையில் அதன் மேல் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஏறி அமர்ந்துள்ளனர். இதனால் திடீரென வலை பாரம் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றின் மேல் அமர்ந்திருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஆழமான கிணற்றில் விழுந்துள்ளனர்.
 
இதில் 13 பெண்கள் உயிரிழந்த நிலையில், 15-க்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குஷிநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உள்ளூர் நிர்வாகத்தால் சாத்தியமான உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெபமாலை, மெழுகுவர்த்தி கொடுத்து வாக்குசேகரிக்கும் பாஜக! – கோவையில் சுவாரஸ்யம்!