கரண்ட் பில் ரூ.3,419 கோடி: பார்த்தவுடன் மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (15:04 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு 3419 கோடி ரூபாய் கரண்ட் பில் என வந்ததைப் பார்த்ததும் மயக்கமடைந்து கீழே விழுந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குவாலியர் என்ற பகுதியில் சஞ்சீவ் - பிரியங்கா தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மின்சார கட்டணம் 1000 ரூபாய்க்கும் குறைவாகவே வரும்
 
இந்த நிலையில் திடீரென 3419 கோடி ரூபாய் மின்சார கட்டணம் என வந்ததை பார்த்ததும் சஞ்சீவ் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை அறிந்து அவரது மனைவி பிரியங்கா அதிர்ச்சி அடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் 
 
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறிய போது தவறுதலாக 3419 கோடி என தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வந்துள்ள மின்சார கட்டணம் 1300 ரூபாய் என்றும் கூறியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments