ஆன்லைன் மூலம் புதுவிதமான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே ஒரு கோடு நம்பரை என்டர் செய்ததால் இளம் பெண் ஒருவர் தனது சேமிப்பு பணம் முழுவதையும் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இளம் பெண் ஒருவருக்கு வாட்ஸப் காலில் ஒரு நபர் பேசி உள்ளார். மொபைல் கஸ்டமர் கேரில் இருந்து பேசுவதாகவும் தற்போது இ-சிம் வசதி இருப்பதால் அதை ஆக்டிவேட் செய்தால் செல்போன் தொலைந்தால் கூட எளிதில் சிம் கார்ட் பெறலாம் என்றும் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்பதை நம்பி அந்த இளம் பெண் அவர் கொடுத்த கோடு நம்பரை பதிவு செய்ய உடனே அவர் தனது செல்போன் செயல் இழந்ததை பார்த்தார். இதனை அடுத்து அவர் கஸ்டமர் கேரில் கேட்டபோது அவரது பிரச்சனை புரியாமல் புதிய சிம் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அவரும் புதிய சிம்கார்டு வாங்கிய பிறகு வந்த குறுந்தகவல்களை பார்த்தபோது அவரது பெயரில் இருந்த டெபாசிட் பணம் எடுக்கப்பட்டிருந்ததாகவும் இரண்டு வங்கி கணக்குகளில் இந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவரது செல்போன் நம்பரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பர்சனல் லோன் வாங்கப்பட்டு இருப்பதாகவும் எஸ்.எம்.எஸ் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மொத்தம் 27 லட்ச ரூபாய் ஒரே ஒரு கோடு நம்பரை பதிவு செய்ததால் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.