கர்நாடக குளிர்பான நிறுவனத்தில் ரூ.1400 கோடி முதலீடு.. முத்தையா முரளிதரன் அதிரடி..!

Mahendran
புதன், 19 ஜூன் 2024 (12:23 IST)
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் உள்ள குளிர்பான நிறுவனத்தில் 1400 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 1400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில் துறை அமைச்சர் இடம் முத்தையா முரளிதரன் கூறியுள்ளதாகவும் இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் கூறப்படுகிறது.
 
முதலில் 230 கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம் தற்போது மொத்தம் ஆயிரம் கோடியாக மாற்றி அமைக்கப்பட உள்ளது என்றும் இன்னும் சில ஆண்டுகளில் 1400 கோடியாக உயர்த்தப்படும் என்றும் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஆலையின் உற்பத்தி தொடங்கும் என்றும் கர்நாடகா தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வருங்காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய முத்தையா முரளிதரன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments