Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவா பாஜக பெண் வேட்பாளருக்கு ரூ.1400 கோடி சொத்து.. வேட்புமனுவில் ஆச்சரியம்..!

Advertiesment
கோவா பாஜக பெண் வேட்பாளருக்கு ரூ.1400 கோடி சொத்து.. வேட்புமனுவில் ஆச்சரியம்..!

Mahendran

, வியாழன், 18 ஏப்ரல் 2024 (12:08 IST)
கோவாவில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் பெண் வேட்பாளருக்கு 1400 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களை வேட்புமனுவில்  தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் கோவா மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பல்லவி என்பவருக்கு 1400 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து, விளையாட்டு, ரியல் எஸ்டேட், கப்பல் கட்டுதல், கல்வி நிறுவனங்கள், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் பல்லவி தனக்கு 255 கோடி அசையும் சொத்துக்களும், 994 கோடி ரூபாய் அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கணவருக்கு 83 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு, லண்டனில் அப்பார்ட்மெண்ட், மேலும் 5 கோடிக்கு மேலாக தங்க ஆபரணங்கள் வைத்திருப்பதாகவும் 3 பென்ஸ் கார்கள், மகேந்திரா உட்பட வேறு இரண்டு கார்கள் ஆகியவை தன்னிடம் இருப்பதாகவும் வங்கியில் டெபாசிட் ஆக மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் இருப்பதாகவும் மும்பையில் 25 கோடிக்கு ஆடம்பர வீடு இருப்பதாகவும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து விவரம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு..! அதிர்ச்சியில் பயணிகள்...!!