ஆந்திராவில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
நாட்டில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வேளையில்லாமல் இருக்கின்றனர். பலர் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் படித்த வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் ஒரே குடும்பத்தில் 2 பட்டதாரி இளைஞர்கள் இருந்தாலும் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 அளிக்கப்படும் என்றார்.
இத்திட்டத்திற்காக ஆந்திர அரசு 1200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.