Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதில் தவறு ஏதும் கிடையாது: அமைச்சர் ரோஜா கருத்து..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (14:22 IST)
இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதில் எந்தவித தவறும் இல்லை என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.
 
இந்தியா என்ற பெயரை பாரத் என மத்திய அரசு மாற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் வரும் பாராளுமன்ற தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன என்பதும் இதுகுறித்து அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா இது குறித்து தெரிவித்த போது ’இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறியுள்ளார். 
 
மேலும் நமது வழக்கத்தில் உள்ளது பாரத தேசம் என அழைத்து வருகிறோம். ஆங்கிலத்தில் இந்தியா என அழைப்பதை காட்டிலும் பாரத் என மாற்றிவதில் எந்தவித தவறும் இல்லை” என தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments