Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ரோஜாவை எதிர்த்து விஜயகாந்த் பட நடிகை போட்டியா?

நடிகை ரோஜாவை எதிர்த்து விஜயகாந்த் பட நடிகை போட்டியா?
, திங்கள், 18 மார்ச் 2019 (13:22 IST)
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால் அம்மாநில அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன.
 
இந்த நிலையில் இம்முறை எப்படியேனும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் உள்ள ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் 175 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
 
இதில் நடிகை ரோஜா ஏற்கனவே போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கும் நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளராக நடிகை வாணி விஸ்வநாத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை வாணி விஸ்வநாத், விஜய்காந்த் நடித்த 'நல்லவன்', 'பூந்தோட்ட காவல்காரன்' உள்ளிட்ட ஒருசில தமிழ்ப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
webdunia
மேலும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக, குப்பம் தொகுதியில் கே.சந்திரமவுலி என்பவர் போட்டியிடவுள்ளதாகவும், என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான தெலுங்கு தேச வேட்பாளர் பாலகிருஷ்ணாவுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கே. இக்பால் அகமது போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்ரல் 18 - ல் மதுரையில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி