Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோகித் அவுட்... கொண்டாடிய CSK ரசிகர் அடித்து கொலை...அதிர்ச்சி சம்பவம்

sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (16:34 IST)
ஐபிஎல்-2024 சீசன் சமீபத்தில் தொடங்கி லீக் போட்டிகள் தொடர்ந்து  நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில்  27 ஆம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கல் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.
 
278 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன்  மும்பை அணி விளையாடியது.
 
இதில், மும்பை அணியின்  இஷான் கிஷன், ரோகித் சர்மா ஆகியோர் 26 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். 
 
இந்தப் போட்டியைக் காண மராட்டியத்தின் கோலாப்பூர் நகரில் அனுமந்த்வாடி கிராமத்தில், பந்தோபண்ட் திபிலே (வயது 63),  என்பவர் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
அதேவீட்டிற்கு திபிலேவின் மற்றொரு நண்பரான பலவந்த் ஜாஞ்ஜே ( 50வயது) சென்றுள்ளார்.
 
இருவரும் நண்பரின் வீட்டில் ஐபிஎல் போட்டியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.  திபிலே சென்னை அணியின் தீவிர ரசிகர் என்பதால், அப்போது ரோஹித் சர்மா அவுட்டானதும், அதனை தீபிலே மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதனால் ஆத்திரமடைந்த ரோஹித்தின் தீவிர ரசிகரான ஜாஞ்சே அவருடன் வாக்குவாதம் செய்தார்.  அங்கிருந்த சென்ற அவர்,. தன் மருமகன் சாகருடன் வந்து, திபிலேவை அடித்து உதைத்து, கம்பால் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் திபிலே மயங்கி தரையில் சரிந்து விழுந்தார்.  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
பின்னர், திபிலேவின் நண்பர் மற்றும் மருமகன் சாகர் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எம்பிக்களின் டீசர்ட் வாசகங்கள்.. சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு..!

இன்று நடைபெறவிருந்த ரயில்வே தேர்வும் ரத்து.. தேர்வர்கள் அதிர்ச்சி..!

அதிகரிக்கும் கொலை சம்பவம்! ரவுடிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு! - உஷார் நிலையில் காவல்துறை!

தமிழகத்தின் ஒவ்வொரு பூத்திலும் தண்ணீர், மோர் பந்தல்கள்: அண்ணாமலை

பசுமாட்டை கடித்து குதறிய தெருநாய்கள்.. பரிதாபமாக இறந்த பசுமாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments