Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமிக்கு திரும்பும் ஏவுகணை சோதனை..! ஹாட்ரிக் வெற்றி என இஸ்ரோ பெருமிதம்..!!

Missle

Senthil Velan

, ஞாயிறு, 23 ஜூன் 2024 (12:04 IST)
விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று பூமிக்கு மீண்டும் திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  ஏற்கெனவே 2 சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில், இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி பெற்றுள்ளது.    
 
இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஏவுகணை தரையிறங்கும் பரிசோதனையில் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெற்றியை இஸ்ரோ அடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது ஒரு ஹாட்ரிக் வெற்றி ஆகும். இந்த சோதனை இன்று (23.06.2024) காலை 07.10 மணியளவில் வெற்றியடைந்தது என்றும் ‘புஷ்பக்’ ஒரு துல்லியமான கிடைமட்ட தரையிறக்கத்தை செயல்படுத்தியது என்றும் சவாலான சூழ்நிலையில் மேம்பட்ட திறன்களை இந்த சோதனை காட்டுகிறது என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 
webdunia
மேலும் ஜே. முத்துப்பாண்டியன் என்பவர் திட்ட இயக்குநராகவும், பி. கார்த்திக் என்பவர் ஏவுகணையின் இயக்குநராகவும் உள்ளனர். இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி குழுவினருக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

 
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் உன்னிகிருஷ்ணனும் இந்த குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் வருமானத்தை பெருக்க இப்படி செய்யலாமா.? திமுக அரசை மறைமுகமாக சாடிய திருமா..!!