Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 2 ஜூலை 2024 (20:18 IST)
உதட்டுடன் உதடு சேர்ந்து முத்தமிட்டால் உயிர் கொல்லி காய்ச்சல் பரவும் என்று இந்த காய்ச்சலுக்கு முத்தக் காய்ச்சல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
முத்தமிடும்போது எச்சில் மூலம் பரவும் வைரஸ் தொற்று காரணமாக முத்தக் காய்ச்சல் ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இந்த முத்தக்காய்ச்சல் ஆன்டிபயாடிக் மருந்துக்களால் குணமடையாது என்றும் குறிப்பாக இந்த முத்தக்காய்ச்சல் டீன் ஏஜ் மற்றும் இளைஞர்களை மட்டுமே பாதித்து வருவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிகப்படியான காய்ச்சல், கழுத்து வலி, அக்குள் உள்பட சில பகுதிகளில் வீக்கம், தொண்டை வறட்சி, தோல்களில் அரிப்பு, தலைவலி ஆகியவை இந்த முத்தக்காய்ச்சலுக்கு அறிகுறி என்றும் இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர் மதுபான கூட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு முத்தமிட்டதால் இந்த முத்தக் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் அதன் பின் அவர் மருந்துகளை எடுத்துக்கொண்டு குணமாகி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments