இந்தியாவில் நிலநடுக்க ஆய்வு வல்லுநர்கள் அடிக்கடி துளையிட்டு ஆய்வு செய்து வருவது பெரும் நிலநடுக்கத்துக்கு வழிவகுக்கும் என்று புவியியல் ஆய்வாளர் சுகந்தாராய் கூறியுள்ளார்.
இதுகுறித்து புவியியல் ஆய்வாளர் சுகந்தாராய் கூறியதாவது:-
இந்தியாவில் நிலநடுக்க ஆய்வாளர்கள் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். மராட்டிய மாநிலத்தில் உள்ள நீர்மின் அணையின் அருகில் உள்ள நிலப்பகுதியில் அடிக்கடி துளையிட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவர்களின் இந்த முறையிலான ஆய்வு எதிர்காலத்தில் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இது பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பை உருவாக்குவதற்கு சமம் என்றார்.