ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக இருந்து வந்தது என்பதும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வட்டிவிகிதம் உயர்த்தப்படவில்லை என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது 0.40 சதவீதம் வட்டி ரெப்போ விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்
இந்த அறிவிப்பு காரணமாக பெர்சனல் லோன், வீடு கட்ட வாங்கிய லோன் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கு வாங்கிய லோன் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்