Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 10 முதல் மலிவான ஸ்மார்ட் போன்: முகேஷ் அம்பானி அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (15:59 IST)
விலை மலிவான புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அதாவது விநாயகர் சதுர்த்தி முதல் விற்பனை செய்யப்படும் என ஜியோ நிறுவனத்தின் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோவின் 44வது வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி இதுகுறித்து மேலும் கூறியதாவது: கூகுள் மற்றும் ஜியோ கூட்டாக இணைந்து மலிவான அதே நேரத்தில் தரமான ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இரு நிறுவனங்களின் பயன்பாடுகளிலிருந்தும் முழு தொகுப்பு பயன்பாடுகளையும் ஆதரிக்கும் ஒரு முழுமையான ஸ்மார்ட்போன் இது. 
 
ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய இந்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஸ்மார்ட்போன், அல்ட்ரா-மலிவு மற்றும் பேக்ஸ் கட்டிங்-எட்ஜ் ஆகிய அம்சங்களை கொண்டது.. கூகுள் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வகையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் இருக்கும்.  இந்த ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பர் 10ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments