Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாய்பேசாத முடியாத பெண்ணை நரபலிக் கொடுக்க திட்டம் – உறவினர்களின் கொடூரச் செயல்!

வாய்பேசாத முடியாத பெண்ணை நரபலிக் கொடுக்க திட்டம் – உறவினர்களின் கொடூரச் செயல்!
, வெள்ளி, 22 மே 2020 (17:26 IST)
ஆந்திராவில் வாய் பேசமுடியாத பெண் ஒருவரை அவரது உறவினர்களே நரபலிக் கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏதேனும் ஒரு காரியம் நிகழ வேண்டும் என்று இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஆடு, கோழிகளை பலி இடுவது கிராம மக்களின் வழக்கம். ஆனால் ஒரு காலத்தில் இதுபோல வேண்டிகொண்டு மனிதர்களையே பலிக் கொடுக்கும் நரபலி பழக்கம் ஆதிவாசி மனிதர்களிடம் இருந்தது.

இப்போது அந்த பழக்கமெல்லாம் மலையேறிவிட்டது நாம் நினைத்தோமானால் அது தவறு என்று சுட்டும் வண்ணம் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் புதையல் எடுப்பதற்காக சரஜம்மா என்ற வாய்பேச முடியாத பெண்ணை அவரது உறவினர்களே பலி கொடுக்க முயன்றுள்ளனர். அவரது உறவினர்களான சுப்பமா, சேஷாத்ரி தம்பதியினர் ஏரியின் அருகே அழைத்துச் சென்று இந்த கொடூர செயலை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அதைப் புரிந்துகொண்ட சரஜம்மா அலறியுள்ளார். இதனால் அக்கம்பக்கம் கிராமத்தில் இருந்த மக்கள் ஓடிவந்து அந்த கொடூர செயலை நிறுத்தியுள்ளனர். இதன் பின்னர்  சராஜம்மாவின் மகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த எஸ்.ஆர். புரம் போலீசார் தலைமறைவாகி உள்ள அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்மி விலையில் கில்லி பேக் - வோடஃபோன் ஐடியா!