Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேகா சிந்து கொலை செய்யப்பட்டாரா? - தந்தை பகீர் தகவல்

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (14:14 IST)
கார் விபத்தில் பலியான மாடல் அழகி ரேகா சிந்துவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெங்களூரை சேர்ந்த ரேகாசிந்து, ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக காரில் சென்னை வந்து கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் பலியானார். அவருடன் மொத்தம் 6 பேர் வந்தனர். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வந்த காரை ஓட்டிய டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரேகாவின் உடலை பார்த்த அவரின் தந்தை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
 
என் மகளின் ஒரு கை மற்றும் கால் துண்டாகியுள்ளது. அவர் ஆடி காரில் வந்தார். விபத்து ஏற்பட்டால் பலூன் வெளியே வந்து உயிரை காத்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதேபோல், கார் கதவு தானாக திறந்து வெளியே வந்து விழுந்தாரா?. மேலும், அவரோடு வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பி உள்ளனர். என மகள் மட்டும் இறந்துவிட்டார். அவர் மரணத்தில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி குறித்து கேலி சித்திரம்.. காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம்..!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியவர் அடித்துக் கொலை.. கிரிக்கெட் போட்டி நடந்த இடத்தில் விபரீதம்..!

இன்று அட்சய திருதியை.. அதிகாலை முதலே நகைக்கடைகளில் குவியும் கூட்டம்..!

பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் பட்டியலில் வீர மரணம் அடைந்த வீரரின் தாயார்.. அதிர்ச்சி தகவல்..!

முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்.. புகுந்து விளையாடுங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments