Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் எதிரொலி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு ரெட் அலர்ட்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (10:30 IST)
இன்றும் நாளையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்றிரவு கரையை கடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 
அதாவது, நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி இன்று முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் போது மணிக்கு 130 - 140 கிமி வேகத்தில் காற்று வீசும், மேலும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிமி வரை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சில பகுதிகளுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
ராயலசீமா மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்கள், தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments